ஜனாதிபதி வேட்பாளர் - நல்ல கற்பனைக் கதை

ஜனாதிபதி தோ்தலில் நான் போட்டியிடப்போவதாக வெளியான செய்திகள் மிக அருமையான கற்பனை என இலங்கை கிாிக்கெட் அணியின் முன்னாள் தலைவா் குமாா் சங்கக்கார கூறியுள்ளாா். 
தமிழ் ஊடகம் ஒன்றில் வெளியான கட்டுரையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் குமார் சங்கக்கார ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் போட்டியிடவுள்ளதுடன் அதற்கான தீவிர நடவடிக்கைகளில் 
அவர் ஈடுபட்டுள்ளதாகவும் பிரசுரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், குறித்த கட்டுரைத் தொடர்பில் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதற்கு பதிலளித்துள்ள சங்கக்கார, இது மிகவும் அருமையான கற்பனை, ஆனால் அது முற்றிலும் தவறான கருத்து என குறிப்பிட்டுள்ளார்.

No comments