அரச அச்சக கூட்டுதாபனம் கஜந்தவிடம்!


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதுவரை காலமும் தன்னிடம் வைத்திருந்த அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தை காணி மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் கயந்த கருணாதிலகவிடம் ஒப்படைக்க தீர்மானித்துள்ளா்.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலிலும் ஜனாதிபதி கையொப்பம் இட்டுள்ளார்.
தேசிய அரசாங்கம் இருந்த காலகட்டத்தில் அரச அச்சகக் கூட்டுத்தாபனம் அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டாரவின் கீழ் காணப்பட்டது. பின்னர் மஹிந்த ராஜபக்ஸவை பிரதமராக அறிவித்தது முதல் உள்ள 59 நாட்கள் புதிய அரசாங்க காலத்தில் ஜனாதிபதியினால் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.
இதன்பிறகு அமைந்த ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் கீழும் ஜனாதிபதி இந்த திணைக்களத்தை தன்னிடமே வைத்திருந்தார்.
இந்நிலையில், இந்த திணைக்களத்தை தன்னிடம் வழங்குவதற்கு தேவையான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட தீர்மானித்துள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

No comments