தொடர் உயிரிழப்பு, தோல்வியின் அறிகுறியா! குமுறும் அதிமுகவினர்!

திரைப்பட  நடிகரும், முன்னாள் எம்.பி.யுமான ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் இன்று உயிரிழந்தார்.

2009 மக்களவை தேர்தலில் இராமநாதபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர் பின்பு  2014-ல் திமுக-வில் இருந்து விலகி அதிமுக-வில் இணைந்தார்.

சினிமா நடிகரான இவர் அண்மையில் வெளியான எல்கேஜி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
தேர்தல் கூடடணி உறுதியானதில்ல இருந்து அதிமுக MP,MLA  உட்பட பல முக்கிய நிர்வாகிகள்  உயிரிழந்துள்ளது தொண்டர்களிடையே தோல்வியின் அறிகுறியே என ஏங்க வைத்துள்ளது.

No comments