வவுனியாவும் பறிபோகின்றதா?


வடக்கின் நுழைவாயிலான வவுனியா மாவட்டத்தின் தமிழ் பெரும்பான்மையினை சிதறிக்கும் நகர்வுகளில் இலங்கை அரசு மும்முரமாக குதித்துள்ளது.

வவுனியா மாவட்டத்தில் தற்போது தமிழர்கள் 83 வீதம் முஸ்லீம்கள் ஏழு வீதம் சிங்களவர்கள் பத்து வீதமும் உள்ளனர். மகிந்த ராஜபக்ச ஆட்சியின் பின்னர் வவுனியாவில் குடிப்பரம்பலில் மாற்றங்களை ஏற்படுத்தும் அளவுக்கு சிங்களக் குடியேற்றங்கள் ஆரம்பிக்கப்பட்டன. 2015 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த மைத்திரி- ரணில் அரசாங்கமும் சிங்களக் குடியேற்றத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது. 

நெடுங்கேணியை அண்டிய பகுதிகளில் உருவாக்கப்பட்டுள்ள புதிய சிங்கள கிராமங்களான நிகவெவ, சபுமல்தன்ன, போகஸ்வெவ உட்பட முல்லைத்தீவு மாவட்டத்திற்குட்பட்ட வெலிஓயா, சம்பத்நுவர போன்ற பகுதிகளிற்கான வாக்காளர் பட்டியல்கள் வவுனியா மாவட்டத்துடன், இணைக்கப்பட்டுள்ளது.

நெடுங்கேணி நகரிலிருந்து கிழக்கு புறமாக 15 மைல் தொலைதூரத்தில் காணப்படுகின்ற அடர்ந்த வனாந்தரப்பகுதியில் பரவலாககுடியேற்றங்கள் செய்யப்பட்டும், மருதோடைகிராமத்தில் பல ஆயிரம் ஏக்கர் காடுகள் அளிக்கப்பட்டு சிங்கள மக்கள் குடியமர்த்த பட்டிருக்கிறார்கள். குறித்த பகுதியிலிருந்து வெலி ஓயாபிரதேசம் ஐந்து கிலோமீட்டர் தொலை வில்காணப்படுகிறது.

அங்கு குடியேற்றப்பட்ட மக்களில் அனேகமானோர் அனுராதபுரத்தை சொந்த இடமாக கொண்டுள்ளதுடன் குடியேற்றப்பட்ட பின்னர் பலருக்கு வீடுகள் வழங்கப்பட்டு, வீதிகள் அமைக்கப்பட்டு, யானை வேலி அமைக்கப்பட்டு சில வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

இம்முறை நடைபெற்ற உள்ளாட்சிமன்ற தேர்தலிலும் அந்தமக்கள் வவுனியாவடக்கு பிரதேச சபைக்கே தமது வாக்கைஅளித்துள்ளனர்.ஆனால் அவர்களுடைய பிரதேசசெயலக பிரிவாக வெலிஓயா காணப்படுகிறது.

தமிழ் மக்களின் எல்லை கிராமங்களான வெடிவைத்தகல், கோவில்புளியங்குளம், இஊஞ்சல்கட்டி போன்றவை இணைந்து ஒரு வட்டாரமாக உருவாக்கப்பட்டது. போகஸ்வெவகிராமத்தில் 350 வாக்குகள் இருப்பதுடன் குறித்த மூன்று தமிழ் கிராமங்களிலும் 175 வாக்குகளே இருக்கின்றன.

இதனால் இம்முறை நடைபெற்றதேர்தலில் இந்த வட்டாரத்தில் சிங்கள பிரதிநிதிஒருவரே வெற்றி பெற்றுள்ளார்,அவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் கட்சியை சார்ந்தவராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments