நான் கௌரவ உறுப்பினர் - ஊரடங்கில் கைதான உறுப்பினரின் கூச்சல்


நான் ஒரு கௌரவ உறுப்பினர், நீங்கள் எனக்குத் தந்த அடையாள அட்டைக்கு மதிப்பு இவ்வளவு தானா என ஊரடங்கு நேரத்தில் சந்தேகத்திற்குரியவகையில் நடமாடி கைது செய்யப்பட்ட யாழ் மாநகரசபையின் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த முஸ்லீம் உறுப்பினர் யாழ் மாநகரை ஆணையாளரை கடிந்துகொண்ட சம்பவம் தெரியவந்துள்ளது.

கடந்த சனிக்கிழமை ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளை யாழ்.புறநகர் பகுதியில் உள்ள பள்ளிவாசலுக்கு அருகாமையில் சில முஸ்லீம் இளைஞர்களுடன் சந்தேகத்திற்குரியவகையில் நடமாடினர் எனும் குற்றசாட்டில் யாழ்.மாநகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் முஸ்லீம் உறுப்பினர் ஒருவர் யாழ்ப்பாண பொலிசாரால் கைது செய்யபட்டார்.

பின்னர் மறுநாள் ஞாயிற்றுக்கிழமையே குறித்த உறுப்பினரை பொலிசார் பொலிஸ் பிணையில் விடுவித்தனர்.

பிணையில் வெளியே வந்த உறுப்பினர் உடனடியாகவே யாழ் மாநகர ஆணையாளருக்கு தொலைபேசி அழைப்பு எடுத்துள்ளார். அதன்போது தான் யாழ்.மாநகர சபை உறுப்பினர் என அடையாள அட்டையை காண்பித்தும் பொலிசார் தன்னை கைது செய்து ஒரு இரவு பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்திருந்தமை தனது சிறப்புரிமை மீறல் எனவும் , மாநகர சபை அடையாள அட்டைக்கு பொலிசார் மதிப்பு தரவில்லை எனவும் நீங்கள் தந்த அடையாள அட்டைக்கு இவ்வளவுதானா மதிப்பு என்றும் கடிந்துகொண்டுள்ளார். 

இஸ்லாமிய தீவிரவாதிகளின் கொடூர தாக்குதலையடுத்து நாடுமுழுவதும் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கும் அவ்வப்போது அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு முஸ்லீமாக இருந்துகொண்டு ஊரடங்கு நேரத்தில் நடமாடிவிட்டு இவர் தனக்கு அழைப்பு எடுத்து கடிந்துகொண்டமை தொடர்பில் சக ஊழியர்களிடம் கூறி கவலைப்பட்டுக்கொண்டாராம் ஆணையாளர்.

No comments