இரண்டாம் கட்டத் தாக்குதலுக்கு தயாராகுவதாக எச்சரிக்கை


தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் இரண்டாவது குழு குண்டுத் தாக்குதல் ஒன்றை முன்னெடுக்கத் தயாராகி வருவவதாக இந்திய அதிகாரிகள் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளதாக “ ஹிந்துஸ்தான் டைம்ஸ்” பத்திரிகை இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த அமைப்பால் இலங்கையில் இரண்டாவது தாக்குதல் ஒன்று முன்னெடுக்க தயாராகி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் குறித்தத தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு புலனாய்வு, தொழிநுட்ப உதவியை வழங்குவதாக இந்தியா இலங்கைக்கு உறுதியளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இந்தியப் பாதுகாப்பு பிரிவானது தமிழ்நாட்டிலுள்ள மதத்தலைவர் குறித்து அவதானத்துடன் இருப்பதாகவும் “ ஹிந்துஸ்தான் டைம்ஸ்” பத்திரிகை இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு ஐ.எஸ்.அமைப்பின் உதவியுடன் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ள போதிலும்குறித்த இரு அமைப்புகளுக்கிடையில் நேரடி தொடர்புகள் உள்ளனவா என்பது தொடர்பில் மேலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிப்பதாக “ ஹிந்துஸ்தான் டைம்ஸ்” செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த வருடம் மே மாதம் தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் தேவாலயங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களுக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments