கிளிநொச்சியில் 16 மோட்டார் குண்டுகள் மீட்பு


கிளிநொச்சியில் 16 மோட்டார் குண்டுகள் கிளிநொச்சி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

கடந்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட விடுதலை புலிகளின் பெண்கள் பயிற்சி முகாம்களிலிருந்தே, குறித்த மோட்டார் குண்டுகள் கிடைக்கப்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, குறித்த இடத்துக்கு விரைந்த பொலிஸாரால் அங்கு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதே, இந்த மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டது.

No comments