மட்டக்களப்பு முதல்வரை பாராட்டும் முஸ்லீம் சமூகம்!


தீயினால் முற்றுகையிடப்பட்ட ஏறாவூர் முஸ்லீம் சகோதர இன மக்களின் உயிர் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வரால் நேற்றிரவு காப்பாற்றப்பட்டதாக பாராட்டுக்கள் குவிந்துள்ளது. நேற்றிரவு சகோதர இனமக்கள் வாழும் ஏறாவூர் நகரசபை உட்பட்ட ஏறாவூர் முனையவளவு வீதியில் சுமார் 7மணியளவில் உள்ள அக்பர் எனும் முஸ்லீம் மற்றும் அவர் குழந்தைகள் குடியிருந்த வீடு திடீரென்று தீ நாலாபுறமும் எரியத்தொடங்கியது .இவர்கள் வீட்டிலிருந்து வெளியே தப்பித்து செல்லமுடியாமல் கதவு பூராக எரிதணலால் சூடாக இருந்தது .இதனால் அயலவர் உதவி கேட்டு குக்குரல் இட்டு கதறியுள்ளார்கள்.

இவர்களின் உயிரின் வலியை அறிந்த மக்கள் ஏறாவூர் நகரசபைக்கு அழைப்பு எடுத்தும் விரைந்து வராமையால் 13கிலோமீற்றருக்கு அப்பால் தூரத்திலுள்ள மட்டக்களப்பு மாநகரசபை தீயணைப்பு பிரிவு அலுவலகம் மற்றும் முதல்வர் சரவணபவனுக்கும் தொடர்பை எடுத்து ஒரு குடும்பம் சிக்கியுள்ள ஆபத்தை விளக்கியிருந்தனர்.இதன் போது உடனடியாக அவர் கட்டளையை மட்டக்களப்பு தீயணைப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த சடுதியாக ஏறாவூர் பகுதியில் தீயில் எரிந்துகொண்டிருந்த வீட்டிற்கு சென்று நெருப்பில் பணயமாக வைக்கப்பட்ட உயிர்களும் அவர்களின் பெறுமதியான பொருட்கள் மீட்கப்பட்டு எந்த வித உயிர்சேதமின்றி காப்பாற்றப்பட்டார்கள் .

40 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்களை கொண்ட மட்டக்களப்பு நகர் முதல்வர்; தமது எல்லை தாண்டி எந்தஒரு பிரதியுபகாரம் இன்றி சகோதர இனமக்களை காப்பாற்றியமையால் ஏறாவூர் வாழ் மக்கள் நன்றியுடன் மனநெகிழிச்சியடைந்துள்ளார்கள்.

தமிழனின் பண்பாடுகளை தனது செயற்பாடு மூலம் வெளிப்படுத்தியுள்ளதாகவும்தம்மை நம்பி அடைக்கலம் வந்தவர்களின் உயிர் பாதுகாப்பதும் விருந்தோம்பல் செய்வது வீரமறவர் பண்பாடாகுமென முஸ்லீம் உறவுகள் தகவல் பகிர்ந்துள்ளன.

No comments