வீதியும் திறப்பு: தமிழரசின் புதிய அரசியல் கலாச்சாரம்!அடுத்த தேர்தலிற்கான கூட்டமைப்பின் அறுவடையான கம்பரெலிய கிராம எளுச்சித்திட்டத்தின் கீழ் நாடாளுமன்ற ஈ.சரவணபவனின் இரண்டு மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நாச்சிமார் கோவிலடி காமாட்சி சனசமூகநிலையத்தால் தார் வீதியாக புனரமைப்பு செய்யப்பட்டு நேற்றிரவு இரவோடிரவாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு மாலை 6.13 மணியளவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை. சேனாதிராஜா மற்றும் ஈ.சரவணபவன் ஆகியோரால் வீதி வைபவரீதியாக(?) திறந்து வைக்கப்பட்டது.

அதேவேளை காமாட்சி சனசமூக நிலையத்தின் முன்பாக அமைந்துள்ள சரஸ்வதிதேவியின் சிலை மெருகூட்டப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர்.ஈ.சரவணபவன் மற்றும் அவர் தம் பாரியாரால் அன்று மாலை திறந்து வைக்கப்பட்டு அருட்காட்சியளிக்கின்றது.

யாழில் சுமார் 23ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் இருப்பதற்கு வீடின்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments