தற்கொலைதாரி முன்னர் கைதாகி விடுவிக்கப்பட்டவராம் !


தற்கொலைக் குண்டுதாரிகளில் ஒருவர், ஏற்கனவே சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு உயர்மட்ட அழுத்தங்களால் விடுவிக்கப்பட்டவர் என்று, தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் அமைச்சர் கபீர் ஹாசிம்.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,

“மாவனெல்லவில் சில மாதங்களுக்கு முன்னர், மூன்று புத்தர்சிலைகள் குண்டுவைத்த தகர்க்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக கைதாகிய ஒருவரும், தற்கொலைக் குண்டுதாரியாக செயற்பட்டுள்ளார்.

மாவனெல்ல சம்பவத்தை அடுத்து, புத்தளம் வனாத்தவில்லு பகுதியில் புலனாய்வுப் பிரிவினர் பெருமளவு வெடிபொருட்களை கண்டுபிடித்தனர்.

அப்போது இரண்டு முக்கியமான சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

எனினும், சக்திவாய்ந்த அரசியல்வாதி ஒருவரின் தலையீட்டினால், அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

அவ்வாறு விடுவிக்கப்பட்ட ஒருவரும் தற்கொலைக் குண்டுதாரி என அடையாளம் காணப்பட்டுள்ளார். இதுபற்றிய மேலதிக தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன.” என்றும் அவர் மேலும் கூறினார்.

No comments