வெடிகுண்டுச் சந்தேக நபர் ஒருவர் தெஹிவளையில் கைது

தெஹிவளையில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடையவரென்ற சந்தேகத்தின் ​பேரில், அங்கு சுற்றித்திரிந்துகொண்டிருந்த நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை கைது செய்து பொலிஸ் ஜீப்பில் ஏற்ற முற்பட்ட வேளையில், அப்பகுதி மக்கள் குறித்த நபரை தாக்க முற்பட்டாகவும், பின்னர் பொலிஸார் உடனடியாக செயற்பட்டு குறித்த நபரை விரைவாக ஜீப்பில் ஏற்றி, ​கொண்டுச்சென்றதாகவும் தெரிவித்தனர்.

No comments