பழிவாங்குவேன் - சீறிப்பாய்ந்த ஆர்னோல்ட்

கொழும்புத்துறையில் யாழ் மாநகரசபையின் முன்னாள் ஆணையாளர் வாகீசனினால் சட்டரீதியான முறையில் அனுமதிக்கப்பட்ட பயன்படுத்தப்பட்டுவந்த வீதியினை சிலர் வீசிய பணத்திற்கு ஆசைப்பட்டு யாழ் மாநகரசபை முதல்வரும் ஆணையாளரும் இணைந்து மூடிவிட உத்தரவிட்டுள்ளமை ஊடகங்கள் வாயிலாக அம்பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த பிரதேசத்தில் வாழும் மக்கள் மீது ஆர்னோல்ட் பழிவாங்குவேன் எனும் நோக்குடன் மிரட்டியதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை குறித்த வீதியினை மூடுமாறு அழுத்தம் கொடுத்தவர்களைத் தீண்டிவிட்டு குறித்த பிரதேச மக்கள் மீது பொலிஸ் முறைப்பாடும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் மீனவத் தொழிலினை மேற்கொண்டு வரும் குறித்த பிரதேச இளைஞர்கள் தொழிலுக்குச் செல்லமுடியாது பொலிஸ் நிலையத்திற்கு அலைந்து திரிவதாக கவலையடைந்துள்ளனர்.

எனினும் பொலிஸ் நிலையத்தில் பொலிசாரும் குறித்த இளைஞர்களது வாக்குமூலங்களைப் பதிவு செய்யாது அவர்களை காலை வா, மாலை வா, நாளை வா என சுத்தவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று தேர்ந்து அழைக்கப்பட்ட சில ஊடகங்களுக்குக் கருதத்துத் தெரிவித்த ஆர்னோல்ட் குறித்த விடயத்தில் தன்னைச் திட்டமிட்டு சிக்கவைத்துள்ளதாகவும் குறித்த வீதிய மூடுமாறு உத்தரவிட்டதற்கும் தனக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

ஆனாபோதும் குறித்த வீதியினை மூடுமாறு யாழ்ப்பாணம் மாநகரசபையால் அனுப்பப்பட்ட கடித்தில் ஆணையாளர் கைஒப்பமிட்டுள்ளார். இது தொடர்பில் ஆணையாளரை வினவியபோது, முதல்வரின் உத்தரவில் தனக்கு தரப்படும் கடிதங்களுக்கு வாசித்துப் பார்க்காமலேயே தான் கையெழுத்துப் போட்டுக் கொடுக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் இருப்பதாகவும் ஆனால் குறித்த வீதி சட்டரீதியாகவே அமைக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டார்.

குறித்த பிரதேசத்தில் அவ் வீதியை நம்பி சுமார்  குடும்பங்கள் வசித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments