நியூசிலாந்து தாக்குதலின் எதிரொலியே இலங்கைத் தாக்குதல்கள்

நியூசிலாந்து நாட்டின் கிரைஸ்ட்சர்ச் நகரத்திலுள்ள மசூதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பழிவாங்கவே இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள் தாக்கப்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என பாதுகாப்புச் செயலாளர் ருவான் விஜேவர்தனே தெரிவித்துள்ளார்.

இலங்கலயில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தொடர்பில் சிறீலங்காப் நாடாளுமன்றத்தில் நேற்று விளக்கம் அளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


No comments