சட்டி மற்றும் பாத்திரங்களுடன் வீதிக்கு இறங்கிப் போராடிய பெண்கள்

அனைத்துலக மகளிர் தினமான இன்று அனைத்துலக ரீதியில் பலவகையில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டபோது, ஸ்பெயின் நாட்டின் தலைநர் மாட்ரிட்டில் பெண்கள் சமையல் சட்டி, குவளை மற்றும் பாத்திரங்களுடன் வீதியில் இறங்கிப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

திட்டமிட்டபடி இன்று அதிகாலையில் பெண்கள் ஊதா நிற ஆடைகளை அணிந்தபடி நாடு தழுவிய ரீதியில் பதாதைகளையும் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊதா நிறம் என்பது பெண்களின் போராட்ட நிறச் சின்னமாக அமைவதால் அனைவரும் ஊதா நிறத்திலான ஆடைகளை அணிந்திருந்தமை இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.

No comments