புதிய வகைத் திமிங்கிலம் கண்டுபிடிப்பு

புதிதாகக் கண்டுபிடிக்பட்ட திமிங்கிலம்
சிலி நாட்டுக் கடற்பகுதியில் புதிய வகைத் திமிங்கிலம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர் கடல் ஆய்வாளர்கள்.

கில்லர் வால் (Killer Whale) திமிங்கிலத்திலிருந்து இது உருவத்தில் வேறுபட்டதென உறுதி
செய்துள்ளனர். குறிப்பாக கில்லர் வாலின் கண்களுக்கு மேலு இருக்கும் பட்டையான பகுதி பெரிதாக இருக்கும் என்றும் புதிய திமிங்கிலத்தின் கண்களுக்கு மேல் காணப்படும் பட்டையான பகுதி சிறியதாகக் காணப்படுகின்றது, தலை வட்டமாகவும், துடுப்புகள் குறுகியதாகவும், கூர்மையானதாகவும் இருப்பதாக கூறியுள்ளனர் ஆய்வாளர்கள்.
Killer Whale திமிங்கிலம்

கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் கில்லர் வால் (Killer Whale) திமிங்கிலங்கள் தெற்கு சிலி கடற்பரப்பில் நடமாடுவதை அவதானித்த கடல் ஆய்வாளர்கள் அதன் மரபணு சோதனைகளை நடத்தி அதன் முடிவுக்காக காத்திருந்தபோது இந்த புதிய வகை திமிங்கிலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

No comments