மோடியை விரட்டும் விவசாயிகள்! பதற்றத்துடன் கெஞ்சும் பாஜகவினர்!

பிரதமர் மோடி போட்டியிடும் தொகுதியில் தமிழக விவசாயிகள் 111 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்யப் போகிறோம் என தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு  அறிவித்துள்ளார். அவர்களின் இந்த அறிவிப்பால் தேர்தல் ஆணையத்துக்கும் பிஜேபி இனருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் ஆணையத்தில் உள்ள வசதிப்படி 64 பேர் வரை போட்டியிட்டால் மட்டுமே இயந்திர  வாக்குப்பதிவு  நடத்த முடியும். அதற்கு மேல் வேட்பாளர்கள் போட்டியிட்டால் வாக்குச் சீட்டு முறையில்தான் நடத்த முடியும். இதனால் வாக்கு பதிவில் குழப்பங்களும் ஏற்பட்டு மோடி வெல்லும் வாய்ப்பு ஏட்படலாம்!

எனவே 111 பேர் வேட்பு மனுத்தாக்கல் என்ற அய்யாக்கண்ணு அறிவிப்பால் பதறிப் போய், அய்யா அப்படியெல்லாம் வேண்டாம் என்று கெஞ்சி  மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் பகிரங்கமாகவே அய்யாக்கண்ணுவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் டெல்லியில் இருந்தும் உளவுத்துறை முதல் பல்வேறு துறை அதிகாரிகள் அய்யாக்கண்ணுவை தொடர்பு கொண்டு, உங்க பிரச்னை, கோரிக்கை என்ன? என்று கேட்டு வருவதாகவும், தாமும் விவசாயிகள் பிரச்னை எப்படியாவது தீர்ந்தால் சரி என்று பதிலளித்து வருவதாகவும் அய்யாக்கண்ணு கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

No comments