கர்ணகொடாவுக்கும் ஞாபகம் இல்லையாம்?


அப்பாவி தமிழ் இளைஞர்களை கடத்தி கொலை செய்த விவகாரத்தில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கர்ணகொட, கடத்தல்கள் தொடர்பில் மறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இலங்கை குற்றவியல் புலனாய்வு திணைக்களத்தில் (சிஐடி) கடந்த மூன்று தினங்கள் அவர் விசாரணைக்கு சமூகமளித்திருந்தார்.அப்போதே குறித்த விவகாரம் தொடர்பில் தனக்கு ஞாபகம் இல்லையென ஒரு வார்த்தையில் தெரிவித்துள்ளார். திருகோணமலை கடற்படை முகாமிற்கு  கொழும்பில் கடத்தப்பட்ட இளைஞர்கள் கொண்டுவரப்பட்டமை தொடர்பில் அவர் அறிந்திருந்தார் என விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

முன்னதாக 11 அப்பாவி இஞைர்கள் கடற்படை கும்பலால் கடத்தப்பட்டு  காணாமற்போகச்செயயப்பட்ட விவகாரத்தை கையாண்டதாக முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கர்;ணகொடா கைது செய்யப்படவிருந்தார்.ஆனால் உச்சநீதிமன்றத்தின் அடிப்படை உரிமைகள் வழக்கு தாக்கல் செய்து தான் கைது செய்யப்படுவதைத் தடுக்க அவர் தடை உத்தரவை பெற்றுள்ளார்.

இந்நிலையில் இலங்கை குற்றவியல் புலனாய்வு திணைக்களத்திற்கு சென்று ஒரு வாக்குமூலமொன்றை வழங்கியுள்ளார்.சி.ஐ.டி. பிரிவின் உள்ளக தகவலின்படி மூன்று நாட்கள் காவல்துறையின் காவலில் வைக்கப்பட்டு அவர் விசாரணைக்குள்ளாக்கப்பட்ட போது தனக்கு மறந்து விட்டதாக தெரிவித்துள்ளதுடன் "என்னை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என விசாரணையாளர்களை அச்சுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

No comments