ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன நயன்தாரா!

நயன்தாராவின் நடிப்பில் வெளிவரவிருக்கும் 'கொலையுதிர் காலம்'.  படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நயன்தாரா குறித்து சர்ச்சை கருத்துகளை  தெரிவித்த ராதாரவியை திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்து அவரை தற்காலிகமாக நீக்கியதற்கு ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார் நயன்தாரா.

ராதாரவியின் சர்ச்சை   கருத்து பூதாகரமாக வெடித்தது. பல திரைத்துறை நட்சத்திரங்கள் தங்கள் கண்டனங்களைப் பதிவிட்டனர். ராதரவியில் சர்ச்சை பேச்சு தேர்தலில் எதிரொலிக்கும் என கருதியதால் ஸ்டலின் இந்த நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஏனினினும்  நயன்தாரா தொடர்பாக நான் பேசிய கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. அவ்வாறு, பேசியதற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன் என்றும் என்னால் திமுகவுக்குப் பாதிப்பு என்றால் கட்சியில் இருந்து நானே விலகிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ராதாரவி.

No comments