விஷவாயு தாக்கி 6பேர் உயிரிழப்பு!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த நெமிலியில் அடுக்கு மாடி குடியிருப்பு பகுதியில் உள்ள கழிவு நீர் தொட்டியை துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது கழிவு நீர் தொட்டியிலிருந்து விஷவாயு தாக்கியதில், பணிபுரிந்தவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. விஷவாயு வெளியானதைத் தொடர்ந்து, அப்பகுதியில் குடியிருப்பவர்கள் சில மணித்துளிகளில் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து அங்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், கழிவு நீர் சுத்தம் செய்து கொண்டிருந்த 6 தொழிலாளர்களை வெளியே கொண்டு வந்த நிலையில் சம்பவ இடத்திலேயே 6 பேரும் உயிரிழந்துள்ளது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments