தேர்தல் ஆணையம் முடிவால்! பரிதவிக்கும் தினகரன்!

தினகரனின் அமமுக கட்சிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கவே முடியாது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகக் அறிவித்துவிட்டது.

 பதிவு செய்யப்படாத கட்சிக்கு பொதுச் சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகக் கூறியதை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், அமமுக கட்சி பதிவு செய்யப்பட்டதா? என்று கேள்வி எழுப்பியதோடு

குறுகிய காலமே இருப்பதால், காலத்தைக் கருத்தில் கொண்டு அமமுகவுக்கு ஏதேனும் ஒரு பொதுச் சின்னத்தை ஒதுக்குமாறு உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை செய்துள்ளது.

கடைசியாக அமமுக சார்பில் ஒரு பொதுச் சின்னம் கோரப்பட்டுள நிலையில் . தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரையை ஏற்று, மக்களவை மற்றும் இடைத் தேர்தலில் போட்டியிடும் அமமுகவினருக்கு ஒரு பொதுச் சின்னத்தையாவது ஒதுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

No comments