நகர முதல்வராக ஆடு தேர்வு! அமெரிக்காவில் விநோதம்!

அமெரிக்காவில் வெர்மோண்ட் மாநிலத்தில் உள்ள ஃபேர் ஹேவன் (Fair Haven) எனும் சிறிய நகருக்கு புதியதொரு நகர முதல்வர் (மேயர்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நகரத்தின் முதல்வர் தேர்தல் இவ்வாரம் நடைபெற்றது. இந்நகரில்
சுமார் 2,500 குடியிருப்பாளர்கள் வாழுகின்றனர்.

நடைபெற்ற தேர்தலில் ஃபேர் ஹேவன் நகரத்தின் புதிய மேயராக லிங்கன் என்றவர் 15 வேட்பாளர்களைத் தோற்கடித்து வெற்றிபெற்றார். ஆனால், லிங்கன் என்றவர் மனிதரல்ல. அது ஓர் ஆடு.

தற்போது ஃபேர் ஹேவன் நகரத்திற்கு அதிகாரப்பூர்வமாக நகர முதல்வர் யாரும் இல்லை. என்றாலும் நகர நிர்வாகி ஜோசஃப் கண்டர் (Joseph Gunter) நகரத்தின் தலைவராகப் பொறுப்பை ஏற்றுள்ளார் என்பது விநோதமானது.

No comments