சீமானை நம்பிப் போனேன் கைவிரித்துவிட்டார்: கவுதமன்!

மக்கள் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துவந்த இயக்குனர் வ.கவுதமன், கடந்த மாதம் தமிழ்ப் பேரரசு என்னும் கட்சியைத் தொடங்கினார். தற்போது மக்களவைத் தேர்தலுக்கு தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட  வேட்புமனு தாக்கல் செய்தார்.

வேட்புமனு தாக்கலுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கவுதமன், “தூத்துக்குடியில் போராடிய மக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட அடுத்த ஒன்றரை மணி நேரத்தில், அதனை எதிர்த்து சென்னையில் போராடினோம். தூத்துக்குடி கொடூரத்தை ஐ.நா சபை வரை கொண்டு சென்று பேசினேன். அதனடிப்படையில் இப்பகுதி மக்கள் என்னை தூத்துக்குடியில் போட்டியிடக் கோரினர். அதனால் களஆய்வு செய்துவிட்டு வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். மண் காக்கும் போராட்டம்தான் இந்த மக்களவைத் தேர்தல். வரும் தலைமுறையினருக்கு நல்ல நிலம், நீர், காற்று, சுற்றுச் சூழல் ஆகியவற்றை கையளிக்க வேண்டும் என்பதற்காக போட்டியிடுகிறேன். மக்களின் வேட்பாளராக போட்டியிடும் என்னை வெற்றிபெற வைப்பார்கள் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமானிடம், ``மண்ணைக் காக்க ஒன்றாக இந்தத் தேர்தலை சந்திப்போம்"  எனக் கேட்டேன். அதற்கு,  அவர் நாம் தமிழர் கட்சியின் பலத்தையும் ,வாக்கு எண்ணிக்கையையும் இந்தத் தேர்தலில் நிரூபிக்க வேண்டியிருப்பதால் தன்னால் ஒன்றும் இப்போது செய்யமுடியாது என்றார்.

No comments