நீதியையும் விடுதலையையும் வலியுறுத்தி நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டம்!
தமிழீழ மக்களுக்கு நீதியையும் விடுதலையையும் பெற்றுத்தர கோரி கடந்த புதன்கிழமை (27.03.0219) ஐரோப்பிய பாராளுமன்றத்தின் முன் தமிழீழ மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டபோராட்டத்தை நடத்தியிருந்தனர்.இப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து குருதிஸ்தான் மக்களும் கைகோர்த்து அனைத்துலத்திடம் ஒருமித்த குரலில் எங்களுக்கு நீதி வேண்டும், எங்கள் தேசங்களை அங்கிகரியுங்கள் , அனைத்துலகமே எங்களுக்கு கைகொடு இனப்படுகொலை செய்த அரசுகளை தண்டித்து எங்கள் விடுதலையை அங்கிகரி போன்ற கோசங்களை எழுப்பி விடுதலைக்காக போராடும் இரு இனத்தவரும் சேர்த்து போராட்டத்தை முன் எடுத்தனர்.
ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து தமது ஆதரவை தெரிவித்ததுடன் நடைபெற இருக்கும் ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலில் தாங்கள் வெற்றி பெற்றால் தொடர்ந்து எமது போராட்டங்களுக்கு குரல் கொடுப்பதாக உறுதியளித்து சென்றனர். இறுதியாக "தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்" என்ற தாரகமந்திரத்துடன் நிறைவுக்கு வந்தது.அதே வேலையில் ஐரோப்பிய பாராளுமன்ற மனித உரிமைகள் ஆணையகத்துடன் அரசியல் சந்திப்பும் நடைபெற்றது.






Post a Comment