சிங்கம் கடித்துக் குதறியதில் எஜமான் பலி!

செக் குடியரசு நாட்டில் செல்லப் பிராணியாக வீட்டில் இரு சிங்கங்களை வளர்த்து வந்தார் இளைஞர் ஒருவர். குறித்த இளைஞரை சிங்கம் ஒன்று கடித்துக் குதறியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

உயிரிழந்தவர் ஸ்லின் பிராந்தியத்தில் அமைந்து்ளள ஸ்டிசோவ் கிராமத்தை சேர்ந்தவர் 33 வயதுடைய மைக்கேல் பிராசெக் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மைக்கேல் பிராசெக் தன்னுடைய வீட்டில் கூண்டுகள் அமைத்து 9 வயதான ஆண் சிங்கம் மற்றும் 2 வயதான பெண் சிங்கத்தை வளர்த்து வந்தார்.

நேற்று முன்தினம் சிங்கங்களுக்கு உணவு வைப்பதற்காக கூண்டுக்குள் சென்றபோது அவரை ஆண் சிங்கம் கடித்துக்குதறியது. இதனால் சம்பவ இடத்திலேயே மைக்கேல் பிராசெக் உயிரிழந்தார்.

சம்பவம் அறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மைக்கேல் பிராசெக்கின் உடலை எடுப்பதற்காக இரு சிங்கங்களையும் சுட்டுக்கொன்றுள்ளனர்.

மைக்கேல் பிராசெக் வளர்த்த சிங்கங்களுக்கு உரிய அனுமதிப் பத்திரம் பெற்றிருக்கவில்லை. இதனால் முன்னர் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம், மைக்கேல் பிராசெக், தன்னுடைய பெண் சிங்கத்துடன் நடை பயிற்சிக்கு சென்றபோது, அந்த வழியாக ஈருறுளியில் சென்ற நபரை சிங்கம் தாக்கியது. இதானல் அக்கிராமத்தில் பெரும் பிரச்சினை எழுந்தமை இங்கே நினைவூட்டத்தக்கது.
No comments