விண்வெளிக்கு வாகனம் தயாரிக்கும் டொயோட்டா!

டொயோட்டா நிறுவனமும் ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனமும் ஒன்றுசேர்ந்து ஆய்வு வாகனம் ஒன்றை உருவாக்க முடிவெடுத்துள்ளனர். இதுவே டொயோட்டா நிறுவனத்தின் முதல் முழுமையான விண்வெளி ஆய்வு முயற்சி. ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனமும் டொயோட்டா நிறுவனமும் கூடிய விரைவில் ஒன்றுசேர்ந்து ஆய்வுப் பணியொன்றை மேற்கொள்விருப்பதாக ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் பேச்சாளர் கூறியிருக்கிறார். அதன் விவரங்கள் அடுத்த வாரம் தோக்கியோவில் நடக்கவுள்ள கருத்தரங்கில் வெளியிடப்படும் என்றும் அவர் சொன்னார். 2030க்குள் விண்வெளி வீரர் ஒருவரை நிலவிற்கு அனுப்பத் திட்டமிட்டிருப்பதாக ஜப்பான் 2017இல் தகவல் வெளியிட்டிருந்தது.

No comments