வீடுகள் தீக்கிரை,134 பேர் படுகொலை! தோகோன் பழங்குடியினரின் பயங்கரம்!

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில், வேட்டைக்காரர்களான தோகோன் பழங்குடியினருக்கும், புலானி விவசாயிகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்துவருகிறது குறிப்பாக தோகோன் பழங்குடியினர் அவ்வப்போது புலானி மக்கள் மீது கொடூரமான முறையில் தாக்குதல்  நடத்துவது வழமை. 

இந்த நிலையில், மோப்டி பிராந்தியத்தில் புலானி மக்கள் அதிகம் வசிக்கும் ஒக்சாகாகோவ் கிராமத்துக்குள் இம்முறை தோகோன் இனத்தவர்கள் பயங்கர ஆயுதங்களுடன்  புகுந்து வீடுகள் சூறையாடி தீக்கிரையாகியதோடு  தாக்குதல் நடத்தியதில் குழந்தைகள், கர்ப்பிணிகள் உள்பட 134 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதக சர்வதேச ஊடங்கங்கள் தெரிவிக்கின்றன.


No comments