வெடிமருந்து விபத்து! உடல் கருகி16 பேர் பலி!

மியான்மரின்  ஷான் மாகாணம், மாங்மாவோ நகரில்  60-க்கும் மேற்பட்டோர் வெடிமருந்து  கிடங்கில்  பணியில் இருந்தபோது திடீரென வெடி விபத்து ஏற்பட்டது!
இதனால்  வெடிமருந்து கிடங்குக்குள் தீப்பற்றி  எரியத்தொடங்கியதால் கிடங்குக்குள் இருந்த பணியாளர்கள் வெளியேற முடியாமல் அகப்பட்டனர்,

தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தபோதும்   அதற்குள் 16 பேர் தீயில் கருகி பரிதாபமாக இறந்துவிட்டனர். மேலும் 48 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments