கட்டி முடிக்கப்பட்டது பாலைவன ரோஜா!

பாலைவன நாடானா கட்டாரில் ரோஜா வடிவில் மிகப் பிரமாண்ட அருங்காட்சியகம் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகம் நாளை திறக்கப்படவுள்ளது. இக்கட்டிடத்தை பாலைவன ரோஜா என அழைக்கின்றனர். இக்கட்டிடம் கட்டி முடிப்பதற்கு 10 ஆண்டுகள் எடுத்துள்ளன. அருங்காட்சியகத்தின் சிறப்பாக 1.5மில்லியன் வளைகுடா முத்துக்களைக் கொண்டு கம்பளம் அமைக்கப்பட்டுள்ளது.
பாலைவன ரோஜா அருங்காட்சியகம் 54,000 சதுர மீற்றரில் சுற்றுவட்டாரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அருங்காட்சியகம் மட்டும் 1,500 சதுர மீற்றரில் அமைந்துள்ளது. இக்கட்டிடத்தை அமைப்பதற்கு 434 மில்லியன் அமொிக்க டொலர்கள் செலவு செய்யப்பட்டன.
No comments