20 ஆண்டுகளாக வானூர்தி செலுத்தி போலி வானோடி!

தென்னாபிரிக்காவில் வானோடி ஒருவர் 20 ஆண்டுகளாக வானோடிப் பத்திரம் இன்றி தென்னாபிரிக்கா ஏர்லைன்ஸ் வானூர்தி சேவையில் பணிபுரிந்துள்ள என்ற செய்தி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தென்னாபிரிக்காவில் இருந்து ஜெர்மனிக்கான வானூர்த்திப் பயணத்தில் சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலை தொடருக்கு மேல் வானூர்தி பறந்த போது அதிர்வு ஏற்பட்டது. அப்போது வானூர்தியை வினோதமாக இயக்கிய விதம் அவர் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து வில்லையம் சாண்ட்லர் என்ற தென்னாபிரிக்காவைச் சேர்ந்த வானோடியின் மீது விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணைகளின் முடிவில் அவர் வானோடி இல்லை எனவும் அவருக்கு வானூர்தியைச் செலுத்த அதற்கான பத்திரமும் ( லைசென்ஸ்) இல்லை எனத் தொியவந்துள்ளது.

குறித்த வானோடி வானூர்தி செலுத்துவதற்கு முன்னர் வானூர்திக்கான பொறியிலாளராக பணியாற்றியிருந்தார். அந்த பட்டறிவை வைத்தே அவர் 20 ஆண்டுகளாக வானூர்தி செலுத்தியுள்ளார் என்ற அதிர்ச்சிகரமான தகவல் தொியவந்துள்ளது.

வானோடியான வில்லியம் சாண்ட்லர் உடனடியாகப் பணி நீக்கம் செய்யப்பட்டதோடு, இழப்பீடாக பெரும் தொகையை விமான சேவை நிறுவனம் கோரியுள்ளது. அவர் மீது குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்க போவதாக அறிவித்துள்ளது.

#William-Chandler

No comments