இரவோடு இரவாக வடக்குக்கு இறக்கப்படும் சிங்கள சாரதிகள்

வடக்கில் 4 மாவட்ட செயலகங்களுக்கு மிக இரகசியமாக ஒரு நாளில் அதிகளவான சிங்கள இளைஞா்களை புகுந்தி பிரதமா் ரணில் விக்கிரம சிங்க வழங்கிய வாக்குறுதியினை மீறியுள்ளாா்.

வட­கி­ழக்­கில் சிங்­க­ள­வர்களை சிற்­றூ­ழி­யர்­க­ளாக, சார­தி­க­ளாக நிய­மிக்­க­மாட்­டோம் என்று தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க வழங்­கிய வாக்­கு­றுதி மீண்­டும் மீறப்­பட்­டுள்ளது.

வட­கி­ழக்கு மாகா­ணங்­க­ளில் கொழும்பு அர­சின் நேர­டிக் கட்­டுப்­பாட்­டி­லுள்ள திணை க்­க­ளங்­க­ளுக்குச் சிற்­றூ­ழி­யர்­க­ ளாக, சார­தி­க­ளாக தென்­ப­கு­தி­யைச் சேர்ந்த சிங்­கள இளை­ஞர்­கள் கடந்த காலங்­க­ளில் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­த­னர்.

இது தொடர்­பில் தமிழ்த் வடக்கில்  தேசி­யக் கூட்­ட­மைப்பு, தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வு­டன் பேச்சு நடத்­தி­யி­ருந்­தது. தென்­ப­கு­தி­யைச் சேர்ந்­த­வர்­கள் வட­கி­ ழக்­கில் நிய­மிக்­கப்­பட மாட்­டார்­கள் என்று உறு­தி­ய­ளித்­தி­ருந்­தார்.

தலைமை அமைச்­ச­ரின் உறு­தி­மொ­ழியை மீறி கடந்த காலங்­க­ளி­லும் சிங்­க­ள­வர்­கள் சிற்­றூ­ழி­யர்­க­ளா­க­வும், சார­தி­க­ளா­க­வும் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­த­னர். இந்த நட­வ­டிக்கை தற்­போ­தும் தொடர்­வ­தா­கச் சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கின்­றது.

கடந்த 25ஆம் திகதி, கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு, மன்­னார், வவு­னியா மாவட்­டச் செய­ல­கங்­க­ளுக்கு தென்­ப­கு­தி­யைச் சேர்ந்த 7பேர் சார­தி­க­ளாக நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­னர். இதே மாவட்­டச் செய­ல­கங்­க­ளில் வடக்­கைச் சேர்ந்த பலர்

அமைய அடிப்­ப­டை­யில் பணி­யாற்­றும் நிலை­யில் தென்­ப­கு­தி­யைச் சேர்ந்­த­வர்­கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

No comments