22 வருடத்தின் பின் இந்திய நாடாளுமன்றத்தில் வைகோவின் குரல்!

இந்திய நாடாளுமன்றத்தில்  22 ஆண்டுகளுக்குப் பிறகு வைகோவின் குரல் ஒலிக்க இருப்பதால், மதிமுகவினர் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு மக்களவை தொகுதியும், ஒரு ராஜ்யசபா தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக வைகோ தேர்வு செய்யப்படுகிறார். இதனால், நீண்ட காலத்திற்குப் பிறகு டெல்லியில் வைகோவில் குரல் ஒலிக்க இருக்கிறது.
திமுக சார்பில் 3 முறை நாடாளுமன்ற மேலவை உறுப்பினராகவும், 2 முறை மக்களவை உறுப்பினராகவும் வைகோ இருந்துள்ளார். திமுகவிலிருந்து பிரிந்து மதிமுக தொடங்கிய பின், அதிமுக கூட்டணியிலும் வைகோ எம்பியாக பணியாற்றி உள்ளார்.
பல்வேறு அரசியல் மாற்றங்களுக்குப் பின்னர், 22 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் எம்.பி.,யாக வைகோ ஆகிறார் என்ற செய்தி, மதிமுகவினருக்கும், அவரது நாடாளுமன்ற உரைக்கு ரசிகர்களாக உள்ள தமிழர்களுக்கும் மிக மகிழ்ச்சியான தகவல்தான்.

No comments