பௌத்தர்கள் இல்லாத இடத்தில் திரிபீடக வாரம் தேவையில்லை - வலி மேற்கில் அதிரடி

திரிபிடகத்தை உலக மரபுரிமையாகப் பிரகடனப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட தி ரிபிடகத்தை கௌரவிக்கும் வாரம் வலி.மேற்கு பிரதேச சபையில் அனுட்டிப்பதில்லை என எ டுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இந்த வாரத்தில் சபையில் அது தொடர்பான எந்தவொ ரு நிகழ்வுகளும் நடைபெறவில்லை.

தேரவாத பௌத்த திரிபிடகம் கடந்த ஜனவரி மாதம் 05 ஆம் திகதி ஜனாதிபதியால் தேசிய மரபுரிமையாகப் பிரகடனம் செய்யப்பட்டது. அதை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத் தும் நோக்கில் மார்ச் 16 ஆம் திகத தொடக்கம் 23 ஆம் திகதி வரையான நாள்களை பௌத்த திரிபிடகத்தை கௌரவிக்கும் வாரமாக அனுட்டிக்குமாறு

ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் அரச திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு சுற்றுநிருபம் அனுப்பட்டிருந்தது.  இந்த வாரத்தில் அனைத்து நிறுவனங்களையும் பௌத்த கொடிகளால் அலங்கரிக்குமாறும் 22 ஆம் திகதி பௌத்த சமய நிகழ்ச்சிகள் மற்றும் தர்ம போதனையை நடத்துமாறும் கூறப்பட்டிருந்தது.

வலி.மேற்கு பிரதேச சபையின் அமர்வு கடந்த 15 ஆம் திகதி தவிசாளர் த.நடனேந்திரன் தலைமையில் நடைபெற்றபோது, மேற்படி சுற்றுநிருபம் செயலாளரினால் சபைக்கு வாசித்துக் காண்பிக்கப்பட்டது. இதன்போது, வலி.மேற்கு பிரதேச சபை தமிழர் பிரதேசத்தில் அமைந்திருப்பதால்,

இங்கு பௌத்தர்கள் எவரும் பணியாற்றாத நிலையில், இங்கு பௌத்த நிகழ்வுகளை நடத்துவதற்கும் சபை அலுவலகத்தை பௌத்த கொடிகளால் அலங்கரிப்பதற்கும் முடியாது என உறுப்பினர் ந.பொன்ராசா கருத்து முன்வைத்தார். அவரைத் தொடர்ந்து மேலும் பல உறுப்பினர்கள் இதே கருத்தை முன்வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து இங்கு திரிபிடகத்தை உலக மரபுரிமையாகப் பிரகடனப்படுத்தும் வாரத்தை வலி.மேற்கு பிரதேச சபையில் அனுட்டிப்பதில்லை என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

No comments