இருக்க ஒரு வீடின்றி அந்தரிக்கும் மக்கள் - பகட்டு வாழ்வில் எம்.பிக்கள்

கிளிநொச்சி- பாரதிபுரம் கிராமத்தில் 5 அங்கத்தவா்களை கெண்ட குடும்பத்திற்கு இன்றளவும் வீட்டுத் திட்டம் வழங்கப்படாத நிலையில், 10 வருடங்களாக குடும்பம் பல்வேறு அசௌகாியங்களை சந்தித்துக் கொண்டிருக்கின்றது.

நிரந்­த­ரத் தொழில் இன்றி கூலி­வே­லைக்­குச் சென்று குடும்­பத்தை பரா­ம­ரிக்­கும் தலை­வ­ரால் வீட்டு வச­தியைப் பெற்­றுக்­கொள்ள முடி­ய­வில்லை. இவர்­க­ளைப்­போல் பல குடும்­பங்­கள் சொந்த நிலம் இன்­மை­யால் அதி­க­ள­வில் பாதிக்­கப்­பட்­டுள்ள­னர்.

2009ஆம் ஆண்­டுக்­குப் பின்­னர் மீள்­கு­டி­ய­மர்ந்­த­வர்­க­ளில் பலர் இன்­று­வரை வீட்­டுத்­திட்­டம் கிடைக்­கப் பெறா­ மல் பல இன்­னல்­களை எதிர்­நோக்கி வரு­கின்­ற­னர். மீளக்­கு­டி­ய­மர்ந்த காலத்­தில் முதல் 5 ஆண்­டு­க­ளும் சொந்த நிலம் இன்மை என்ற கார­ணத்­தி­னால் வீட்­டுத் திட்­டம் மறுக்­கப்­பட்ட நிலை­யில்

தற்­போ­தும் அதே நிலமை நீடிப்­ப­தா­க­வும் குடும்­பத் தலை­வர் கவலை தெரி­வித்­துள்­ளார்.

எனினும் நிபந்தனையற்ற வகையில் ரணிலுக்கு ஆதரவு வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவு என கிளிநொச்சியின் நாட்டாமை எனக் கூறும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனும் அவர் சார்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இந்த மக்கள் மீது அக்கறை செலுத்துவதாகத் தெரியவில்லை.


No comments