ஜெனீவா கடையை மூடிய தமிழரசு தேல்தல் கடைவிரிக்கிறது

ஜெனீவா கடையை மூடியுள்ள தமிழரசுக் கட்சி தற்போது தேர்தல் கடைவிரிப்பிற்கான மும்முர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. முள்ளிவாய்க்காலில் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கு உள்ளக விசாரணை கூட மேற்கொள்ளத் தயாரற்ற நிலையில் இருக்கும் சிறிலங்கா அரசிற்கு முண்டுகொடுத்து அந்த அரசாங்கத்தைப் பாதுகாத்துவந்த தமிழைரசுக் கட்சி ஜெனீவா வரை சென்று இலங்கை அரசாங்கத்திற்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் வழங்க ஒத்துளைத்திருக்கிறது.

அந்த ஜெனீவா கடை வியாபரம் முடிந்த மறுநாளே கொழும்பு திரும்பிய தமிழரசுக் கட்சி சுமந்திரன் ஒருபக்கம் சிறிதரன் இன்னொர் பக்கம் சரவண பவன் இன்னொருபக்கம் என இலங்கை அரசாங்கத்தை விமர்சிக்கும் தங்கள் தேர்தல் கடையைத் திறந்துள்ளனர்.

இவ்விடயத்தில் மக்கள்தான் விழிப்புடன் இருக்கவேண்டும். கொழும்பில் ஒன்றும் தமிழ் மக்களிடம் இன்னொன்றுமாக கூறிவரும் தமிழரசுக் கட்சி அடுத்து வரவிருக்கும் மூன்று தேர்தலுக்காக என்னவென்ன உருட்டுப்பிரட்டுக்களையெல்லாம் சொல்ல முடியுமோ அத்தனையும் சொல்லும். தேர்தலில் வெல்வதற்காக என்னென் செய்ய முடியுமோ அத்தனையும் செய்யும்.



அவ்வகையில் ஜெனீவாவில் இருந்து சுமந்திரன் ரணிலுக்கு மிரட்டல் என்றும், கலப்புப் பொறிமுறையை ஏற்காவிட்டால் சர்வதேச நீதிமன்றம் செல்வோம் என்று சுமந்திரன் நாடாளுன்றில் அரசாங்கத்தை எச்சரித்ததாகவும் கதைவிட  அதற்கு மேல் சென்று “போர்க்குற்ற விசாரணையை எதிர்கொள்வதற்கு இலங்கை அரசியல் தலைவர்களிடம் திராணி கிடையாது என்று சரவணபவன் காட்டம் அடைந்திருக்கிறாராம். இச் செய்தியை வெளியிட்டது கூட யாருமல்ல சரவணபவனுடன் தேர்தல் அரசியல் கதிரைக்காக சண்டையிட்டுக்கொண்டு பிரிந்த அவரது மைத்துனரான வித்தியாதரன்தான் என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.

No comments