2000 மகிழ் ஊர்திகளோடு மூழ்கிய கப்பல்!

இத்தாலி நாட்டை சேர்ந்த கப்பல் ஒன்று கோடிக்கணக்கான பெறுமதியான  2000 மகிழ் ஊர்ந்துகளை அட்லாண்டிக் பெருங்கடல் வழியாக ஏற்றிச் சென்று கொண்டிருந்த போது பிரான்ஸ் கடல் எல்லைக்கு 150 மைல்கள் அருகே திடீரென கப்பல் தீப்பற்றி எரிந்து மூழகியுள்ளது.
தீயை அணைக்க கப்பலில் இருந்த ஊழியர்கள் பெரும் முயற்சி எடுத்த போதும்  பலனளிக்கவில்லை. தகவல் அறிந்தது மீட்புப்படையினர் விரைந்து கப்பலில் இருந்த 27 ஊழியர்களை காப்பாற்றினர். இந்த கப்பல் மூழ்கிய கடல் பகுதி சுமார் 15ஆயிரம் அடி ஆழம் என்பதால் கடலில் மூழ்கிய கப்பல்களை  மீட்க வாய்ப்பில்லை என கூறுகின்றனர்.

No comments