சுமந்திரன் இல்லை என்றால் சரவணபவன் - வித்தியின் நரித் தந்திரம்

தேர்தல் அரசியல் கதிரைக் கனவில் மிதந்த வித்தியாதரன் அரசியல் அவரது மைத்துனரான சரவணபவனால் அரசியல் அனாதையாக்கப்பட்டார். உதயன் பத்திரிகையில் கொடி கட்டிப் பறந்த வித்தியாதரனால் 1500 பிரதிகளைத் தாண்டி காலைக்கதிர் பத்திரிகையை விற்பனை செய்ய முடியவில்லை. இந்நிலையில் தமிழரசுக் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்படுவார் என எதிர்பார்க்கப்படும் தனது மைத்துனரான சரணவபனிடம் மீண்டும் நல்லுறவைப் பேண வித்தியாதரன் முயற்சிப்பதாகவும் உதயனின் ஆசிரியராக இருந்தவாறு ஐ.பி.சி வெளியிடவிருக்கும் பத்திரிகையில் இணைவதற்காக பிரேமானந் டீல் பேசிவரும் நிலையில் பிரேமானந்தின் இடத்தை அதாவது தனது பழைய உதயன் ஆசிரியர் கதிரையையாவது கைப்பற்றிடவேண்டும் என வித்தியாதரன் முயற்சிப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இதன் தொடர்ச்சியாகத்தான் அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கூட யாழ்ப்பாணத்தில்தான் ஒரு பத்திரிகையை இன்னொரு பத்திரிகை நிறுவனம் அச்சேற்றிக்கொடுப்பதில்லை காலைக்கதிரை உதயன் பிரிண்ட் செய்தால் என்ன குற்றம் என வித்தியாதரன் கேள்வியெழுப்பியிருந்தார்.

அதன் பின்னணியிலேயே தனது பத்திரிகையை தமிழரசுக் கட்சி நாளிதழாகவே மாற்றிவிட்ட வித்தியாதரன் வாரத்தில் ஒரு தடைவையேனும் சரணவபவனை முன்பக்கத்தில் அச்சேற்றி மகிழ்விக்கிறார்.

இதைவிட இன்னொரு இராஜதந்திரமும் வித்தியாதரனிடம் உள்ளது சரணவபவன சறுக்கினால் சுமந்திரன் காலில் விழும் தந்திரமும் வித்தியாதரனிடம் உள்ளதாகக் கூறப்படுகின்றது.

விக்கியை முதல்வராக்கியது தவறு எனக்கூறும் தமிழரசின் நிலைப்பாட்டை ஆமோதிப்பதாகக் கூறும் வித்தியாதரன் மாகாண முதலமைச்சர் ஆசனத்திற்கு மறுபடியும் குறிவைக்கத் தொடங்கிவிட்டார் என்கின்றன விடயம் அறிந்த வட்டாரங்கள்.

இந்த வித்தியாதரனே இராணுவப் புலனாய்வுப் பிரிவினால் இயக்கப்படும் அரசியல் கட்சி ஒன்றின் தலைமை ஒருங்கிணைப்பாளரான இருந்ததோட சிலந்திச் சின்னத்தில் கடந்த தேர்தல்களில் போட்டியிட்டிருந்தார் என்பதும் குறிப்படத்தக்கது.

No comments