யாழில் மன்னிப்புக் கேட்ட தயாசிறி

“கடந்த 30 வருடங்கள் கொடிய போரால் வடக்கு மாகாண மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அந்தப் போரின் அனுபவங்கள் உங்கள் எல்லோருக்கும் உள்ளன. நாங்கள் அமைதியாக இரவில் நித்திரை கொள்ளும்போது நீங்கள் பயத்துடன் நித்திரை கொண்டீர்கள். உறவுகளை இழந்தும் தொலைத்தும் இருக்கின்றீர்கள். இந்தத் துர்ப்பாக்கிய நிலைக்கு மன்னிப்புக் கோருகின்றேன்.”

– இவ்வாறு யாழ்ப்பாணத்தில் வைத்துக் கருத்து வெளியிட்டார் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர.

யாழ்ப்பாணம் தட்டாதெருச் சந்திக்கு அருகாமையிலுள்ள லக்ஸ்மி மண்டபத்தில் நேற்றுச் சனிக்கிழமை நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மறுசீரமைப்பு மாநாட்டில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

No comments