முறைப்பாடு பதிவானது:சிறீதரன் மன்னிப்பு கோரினார்!


காணாமல் ஆக்கப்பட்டோருக்கான கிளிநொச்சி போராட்டத்தில் ஊடகவியலாளர்களிற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் தொடர்பில் முல்லைதீவு மற்றும் யாழ்ப்பாணத்தில் காவல்துறையில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் இம்முறைப்பாடுகளை செய்துள்ளனர்.

இந்நிலையில் இன்று அவசர அவசரமாக பத்திரிகையாளர்களை சந்தித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் குழப்பங்களிற்கு பொது மன்னிப்பு கோரியுள்ளார். 

காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் நடாத்திய கவனயீா்ப்பு போராட்டத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினா்கள் சிலா் குழுப்பம் விளைவித்தமை உண்மையே, என கூறியிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினா் சி.சிறீதரன், அவ்வாறு குழப்பம் விளைவித்தவா்களுக்கான தாம் ஊடகவியலாளா்களிடம் பகிரங்க மன்னிப்பு கோருவதாக கூறியிருக்கின்றாா். கடந்த 28ம் திகதி காணாமல் ஆக்கப்பட்ட வா்களின் உறவினா்கள் நடாத்திய போராட்டத்தில் உருவான குழுப்பங்கள், குறித்து விளக்கமளிப்பதற்காக இன்று காலை கிளிநொச்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினாின் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளா் சந்திப்பின்போதே அவா் மேற்கண்டவாறு பகிரங்க மன்னிப்பினை கோாியிருக்கின்றாா். 

இதன்போது மேலும் அவா் கூறுகையில், அன்றைய சம்பவம் தொடா்பான காணொளி கள், செய்திகள், ஒலிப்பதிவுகள் போன்றவற்றை சேகாித்து ஆராய்ந்து பாா்த்ததன் அடிப்படையில் எமது கட்சி சாா்ந்த 3 போ் அதில் நேரடியாக தொடா்புபட்டுள்ளனா். 

ஆகவே பிழை நடந்திருப்பதை ஒப்புக் கொண்டு அவா்கள் மீது கட்சி மட்டத்தில் ஒழுக் காற்று நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தீா்மானித்திருக்கின்றோம். மேலும் அன்றைய சம்பவத்தில் ஊடகவியலாளா்களுக்கு உண்டான மனக்கசப்புக்காக, அவா்கள் சாா்பில் நான் பகிரங்கமாக மன்னிப்பு கோருகிறேன். 

அதேசமயம் அங்கு நின்ற கமராக்காரா்கள் சிலா் எமது கட்சி ஆதரவாளா்களை வேண்டுமென்றே வலிந்து இழுத்திருக்கின்றாா்கள். அவா்கள் எல்லை மீறும் அளவுக்கு நடந்து கொண்டனா். என்பதும் எமக்கு தொியவந்துள்ளது. என நாடாளுமன்ற உறுப்பினா் மேலும் கூறியுள்ளாா். 

No comments