இனி நாடு பிளவுபடும்:சிறீகாந்தா மிரட்டல்!


மீண்டும் தெற்கிலிருப்பவர்கள் கறுப்பு ஜீலை பற்றி பேசுவது மக்கள் பிரதிநிதிகளிற்கான பண்பு அல்லவென டெலோஅமைப்பின் செயலாளர் நாயகம் சிறீகாந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று மதியம் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இது பற்றி கருத்து தெரிவித்த அவர் தமிழர் தரப்பு கலப்பு பொறிமுறை பற்றி பேசக்கூடாதென தெற்கு எதிர்பார்ப்பது அதுவும் மிரட்டல் அரசியல் தமிழ் மக்களது விடுதலைப்போராட்டத்தின் முன்னாள் தூசு எனவும் அவர் தெரிவித்தார்.

டிலான் பெரேரா போன்று மீண்டுமொரு கறுப்பு ஜீலை நிராயுதபாணியான தமிழ் மக்களின் மீது திணிக்கப்பட்டால் அதனை எதிர்கொள்ள தயாராக இருக்கின்றோம்.அது முள்ளிவாய்க்கால் போலல்லாது நாடு பிளவடைவதாகவே அமையுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜநா மனித உரிமைகள் பேரவையில் கூச்சமின்றி இணைப்பங்காளர்களாக இருந்ம இலங்கை இ ங்கே வந்து தமிழ் மக்களை வாய்மூடியிருக்க கோருவது வேடிக்கை

நாம் ஒட்டுமொத்த இராணுவத்தினரையும் தண்டிக்க கோரவில்லை.மாறாக இறுதி யுத்தத்தில் கொலைகளை அரங்கேற்றியவர்களையே தண்டிக்க கோருகின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

No comments