கல்விச் சுற்றுலா சென்ற பேருந்து விபத்து - ஒருவர் பலி 40 பேர் காயம்

அக்கரைப்பற்று - அட்டாளைச்சேனையிலிருந்து கல்விச் சுற்றுலா சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த விபத்தில் 40 பேர் வரையில் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் கண்டி - மாவனல்லை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த விபத்து கடுகண்ணாவில் நேற்று இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் பேருந்து நடத்துனரே உயிரிழந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையே விபத்திற்குக் காரணம் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

No comments