மகிந்தவுக்கு வெட்டு சம்பந்தனுடன் சந்திப்பு - சீற்றத்தில் எதிரணி


சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள நோர்வேயின் வெளிவிவகார இராஜாங்கச் செயலர் மரியன் ஹகென், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவைச் சந்திக்காதமை, கூட்டு எதிரணியினருக்கு கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர், கெஹலிய ரம்புக்வெல,

“சிறிலங்கா வந்துள்ள நோர்வேயின் வெளிவிவகார இராஜாங்கச் செயலர் மரியன் ஹகெனுடனான சந்திப்புக்கு, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவை, கொழும்பில் உள்ள நோர்வே தூதரகம் அழைக்கவில்லை.

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுடன் நிச்சயமாக ஒரு சந்திப்புக்கு, நோர்வே தூதரகம் ஏற்பாடு செய்யும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments