சுமந்திரன் ஆதரவு சிறிதரன் கடும் எதிர்ப்பு - தமிழரசின் இரட்டை முகம்


சிறிலங்கா நாடாளுமன்றில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தில் வடக்கு கிழக்குக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் வடக்கு கிழக்கில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் எனவே குறித்த வரவு செலவுத்திட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள எம்.பிக்கள் அனவரும் ஆதரிக்கவேண்டும் என தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மதியாபரணம் சுமந்திரன் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் அதனை நிராகரித்துள்ள தமிழரசுக் கட்சி உறுப்பினரான சிவஞானம் சிறிதரன் குறித்த வரவுசெலவுத் திட்டத்தில் தமிழ் மக்களுக்கு நன்மைகள் ஏதும் இல்லை தமிழ் மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டுக்கொண்டே இருக்கின்றனர் என கூறியிருக்கிறார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள தமிழரசுக் கட்சியின் இரு உறுப்பினர்களே இவ்வாறு இருவேறு விதமாக எதிர் எதிர்க் கருத்துக்கள் கூறியுள்ளது ஆச்சரியமூடடவதாக உள்ளபோதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேரும் குறித்த வரவுசெலவுத் திட்டத்தை ஆதரிப்பார்கள் என்றே தெரியவந்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவித்திட்டத்தினையும் சிறிதரன் எம்.பி விழுந்தடித்து எதித்திருந்தார். எனினும் ரணிலிடமிருந்து இரண்டு கோடி ரூபா பெற்றுக்கொண்டதன் பின்னர் சிறிதரன் உள்ளிட்ட 15 உறுப்பினர்களும் வரவு செலவுத்திட்டத்தைப் புகழ்ந்து அதற்கு ஆதரவளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனவே சிறிதரன் புத்திசாலித்தனமாக தனது கையூட்டினை அதிகரிப்பதற்காகவே இவ்வாறு நாடகமாடுகின்றார் அவர் இறுதி நேரத்தில் ஆதரிப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

No comments