வாழ்நாள் முழுக்க வழக்கிற்கு அலைவீர்கள் - சயந்தன் மிரட்டல்

யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியை அண்மித்த பிரதேசத்தில் லண்டனைச் சேர்ந்த ஒருவரால் கட்டப்பட்ட சட்டவிரோத கட்டத்திற்கு எதிரனா நடவடிக்கைகள் தமிழரசுக் கட்சியின் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினரான சட்டத்தரணி சயந்தனின் மிரட்டலால் கைவிடப்பட்டமை தெரியவந்துள்ளது.

குறித்த பிரதேசத்தில் லண்டனில் வசித்துவரும் நபர் அண்மையில் யாழ் மாநகர அனுமதி ஏதுமின்றி சட்டவிரோத கட்டடம் ஒன்றினைக் கட்டியிருந்தார். எனினும் அது தொடர்பில் அறிந்துகொண்ட மாநகர துணை மேயர் துரைராசா ஈசன் சம்பவ இடத்திற்குச் சென்று அதனைத் தடுத்து நிறுத்த முற்பட்டதோடு சட்ட நடவடிக்கைக்கும் பணித்திருந்தார்.

எனினும் குறித்த இடத்தில் சட்டவிரோத கட்டடம் கட்டப்படுவதை தடுக்கும் சிவப்பு அறிவித்தல் விடுத்து நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யுமாறு யாழ்ப்பாணம் மாநகரசபையின் பொறியியலாளரால் தொழில்நுட்ட உத்தியோகத்தர்களுக்கு பணிக்கப்பட்டபோதும் அவர்கள் சட்ட நடவடிக்கைக்குச் சென்றிருக்கவில்லை. குறித்த நபரும் கட்டடத்தைக் கட்டி முடித்து வெளிநாடு சென்றுவிட்டார்.

இது தொடர்பில் குறித்த தொழில் நுட்டப உத்தியோகத்தர்களிடம் விசாரணை செய்தபோது தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த சட்டத்தணியான சயந்தனினால் நீங்கள் இன்னமும் திருமணம் ஆகவில்லை. வழக்குத் தாக்கல் செய்வீர்களேயானால் உங்கள் வாழ் நாள் முழுவதும் நீதிமன்றப் படியேறவேண்டிவரும். வேறு திணைக்களங்களுக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றாலும் உங்களை விடமாட்டேன் என மிரட்டியமை தெரியவந்தது.

எனினும் இது தொடர்பில் சபை அமர்வில் குறிப்பிட்ட துணை முதல்வர் ஈசன் குறித்த கட்டடத்தை சட்டவிரோதமான முறையில் கட்டி முடிப்பதற்காக மாநகர பணியாளர்களுக்கு இலஞ்சம் வழக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

No comments