அதிரடிப்படை மீது தாக்குதல்!

யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் மூன்று பெண்கள் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரியாலை கிழக்குப் பகுதியில் தொடர்ச்சியாக மணல் கடத்தல் இடம்பெறுவதாக கிடைத்த தகவலையடுத்து அதனை முறியடிக்க சிறப்பு அதிரடிப்படையினர் நேற்று இரவு அங்கு சென்றிருந்தனர்.
சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்கும் நோக்கில் சென்ற விசேட அதிரடிப்படையினர் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது
அங்கு மணல் கடத்தலில் ஈடுபட்டோரைத் தடுக்க முற்பட்ட சிறப்பு அதிரடிப்படையினருக்கும் மணல் வியாபாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதலில் காயமடைந்த சிறப்பு அதிரடிப் படையினர் மூவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து சம்பவம் இடத்திற்கு விரைந்த யாழ்ப்பாணம் பொலிஸார், விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
அதற்கமைய சிறப்பு அதிரடிப் படையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் தாக்குதல் உடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டில் குறித்த ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments