இயக்கச்சியில் சவாரி?


யாழ்ப்பாணத்தின் அவசர தேவையான மோட்டார் கார் சவாரியினை யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.இலங்கை மோட்டார் றேசிங் சங்கம் உள்ளிட்ட 3 அமைப்புக்கள் இணைந்து நடாத்தும் மோட்டார் சவாரி பந்தயம் வடமாகாணத்தில் முதல் தடவையாக நாளையும், நாளை மறுதினமும் நடைபெறவுள்ளது.

கிளிநொச்சி இயக்கச்சியில் நாளை மற்றும் நாளைமறுதினம் இந்தப்போட்டி இடம் பெறவுள்ளது. இந்தப்போட்டிக்கான ஆரம்ப நிகழ்வு இன்று இரவு 7 மணிக்கு யாழ்ப்பாணம் மாநகர சபை இயங்கிய வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

ஆரம்ப நிகழ்வுக்கு யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர.

No comments