ஊழல் நிரூபணம், முன்னாள் அதிபர் கைது!

அணுசக்தி ஆலை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு ஒதுக்கி 2 லட்சத்து 62 ஆயிரம் அமெரிக்க டோலர்  லஞ்சம் பெற்ற வழக்கில் பிரேசிலில் முன்னாள் அதிபர் மிச்சல் டெமரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர்,

அதேவேளை  இதே வழக்கில் மிச்சல் டெமரின் அமைச்சரவையில் அங்கம்பெற்ற  நிலக்கரி மற்றும் எரிசக்தித்துறை அமைச்சு  பதவி வகித்த மோரிரா பிராங்கோ, டெமரின் நெருங்கிய நண்பரும், முன்னாள் ராணுவ அதிகாரியுமான லீமா பில்கோ ஆகியோர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள மிச்சல் டெமரி பிரேசிலில் 2016 முதல் 2018 வரை அதிபராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது,

No comments