மன்னார் குழப்பம்:பின்னணியில் றோ?


மன்னார் திருக்கேதீஸ்வர குழப்பத்தின் பின்னணியில் இந்திய புலனாய்வு கட்டமைப்பான றோ இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வடக்கு-கிழக்கு தமிழர் தாயகத்தின் தேசிய உணர்வை சிதறடிக்க வைப்பதன் மூலம் மீண்டுமொரு போராட்ட சிந்தனை ஏற்படக்கூடாதென்பதே இந்திய நிலைப்பாடாகும்.அவ்வகையினில் இந்து மத தீவிர போக்குடையவர்கள் சிலரை தூண்டி விட்டு புதிதாக சிலைகளை சர்ச்சைக்குரிய இடங்களில் நிறுவும் பணி யாழிலுள்ள இந்திய துணை தூதரகம் ஊடாகவே முன்னெடுக்கப்பட்டுவருகின்றதென சிரேஸ்ட ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தார்.
அவ்வகையில் மறுபுறமும் சில தரப்புக்கள் கைக்குள் கொண்டுவரப்பட்டு குழப்பங்கபள் விளைவிக்கப்பட்டிருக்கலாமென அத்தரப்பு கூறுகின்றது.

இதனிடையே மன்னார் - திருக்கேதீஸ்வர கோவில் வீதி வளைவை, சிவராத்திரியை முன்னிட்டு உடனடியாக, மீண்டும் 4 நாள்களுக்கு பொருத்தி வைக்குமாறு, மன்னார் நீதவான் சற்று முன் உத்தரவிட்டுள்ளதாக, அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

சிவராத்திரி உற்சவம் நடைபெற வேண்டிய அவசரம் கருதி, இன்றைய தினம் விடுமுறை என்று நாளை வரை காத்திருக்காமல், இவ்வழக்கை நீதவானின் இல்லத்துக்குக் கொண்டு செல்லுமாறு, மன்னார் பிரதி பொலிஸ் மா அதிபருக்கு இன்று காலை அறிவுறுத்தியதாகவும் அதன் அடிப்படையிலேயே,  குறித்த வழக்கு விசாரணை இன்று எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

அவ்வகையில் அரசிற்கு முண்டு கொடுத்து அமைச்சராக இருக்கின்ற மனோகணேசன் பொங்கியெழுந்தததும் இத்தகைய நிகழ்ச்சி நிரலேயென சொல்லப்படுகின்றது.

No comments