சனிக்கிழமை போராட்டக் களத்தில் கறுப்புச் சட்டைக் கும்பல் !!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்திற்கு தொடர்ந்து கால அவகாசம் கொடுக்கக்கூடாது என்றும் இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் அல்லது ஐநா பாதுகாப்புச் சபையில் பாரப்படுத்தவேண்டும் என்பதை வலியுறுத்தி பல்கலைக்கழக மாணவர்கள் சனிக்கிழமை (16) மாபெரும் பேரணி போராடாட்டத்தை மேற்கொள்ள அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த தீர்மானங்களுக்கு முரணான வகையில் இலங்கை அரசாங்கத்திற்கு கால நீடிப்பு வழங்கி இலங்கை அரசாங்கத்தை காப்பாற்றத் துடிக்கும் தமிழரசுக் கட்சியின் இளைஞரணி பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதோடு போராட்டங்களில் பங்கேற்கும் தமிழரசு இளைஞரணியினர் போராட்டத்தில் குழப்பம் விளைவிக்க முனையக்கூடும் என பல்வேறு சந்தேகங்களையும் தோற்றுவித்துள்ளது.

கடந்த மாதம் கிளிநொச்சியில் நடைபெற்ற காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் பங்கேற்ற போராட்டத்தில் கறுப்புச் சட்டடை நபர்கள் எனக் கூறப்படும் தமிழரசு இளைஞரணியினர் மக்கள் போராட்டத்திற்கு எதிராக கோசங்கள் எழுப்பியும் பேரணியில் பங்கேற்ற ஒலிபரப்பு சாதனங்களின் வயர்களை அறுத்தும் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தியும் போராட்டத்தை திசைதிருப்பி குழப்ப முனைந்திருந்தனர்.

இந்நிலையில் நாளை சனிக்கிழமை யாழ்.குடாநாட்டில் நடத்தப்படவுள்ள மக்கள் எழுச்சிப் பேரணிக்கு குறித்த கறுப்புச் சட்டைக் கும்பல் என கூறப்படும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் முன்னணியும் ஆதரவு தெரிவித்துள்ள சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

No comments