தொடர் விபத்துக்கள்! விமான விநியோகத்தை நிறுத்தியது போயிங் நிறுவனம்!

போயிங் நிறுவனம் அதன் 737 Max ரக விமானங்களின் விநியோகத்தைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.கடந்த ஞாயிற்றுக்கிழமை எத்தியோப்பிய ஏர்லைன்ஸ் விமானச் சேவையின் போயிங் 737 Max விமானம் ஒன்று, அடிஸ் அபாபா நகரில் விழுந்து நொறுங்கியது.
விமானத்தில் இருந்த அனைத்து 157 பேரும் உயிரிழந்தனர். 5 மாதங்களுக்கு முன் அதே ரக விமானம் இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளானது.அந்த லாயன் ஏர் விமானத்தில் பயணம் செய்த 189 பேரும் உயிரிழந்தனர் .இரு சம்பவங்களைத் தொடர்ந்து பல நாடுகள் அந்த ரகத்தைச் சேர்ந்த விமானங்களின் செயல்பாடுகளை முடக்கி வைத்துள்ளன.இதனால் அந்த விமானத்தை மீளாய்வு செய்து 737 MAX ரக விமானங்கள் தொடர்ந்து தயாரிக்கப்படும் என்று போயிங் நிறுவனம் கூறியுள்ளது.

No comments