மின்வெட்டு செய்திகள் பொய்யானவை - அமைச்சு விளக்கம்


மின்வெட்டு தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியாகும் சில செய்திகளை மின்வலு எரிசக்தி அமைச்சு முற்று முழுதாக நிராகரித்துள்ளது.

எதிர்காலத்தில் மின்வெட்டு அமுலாக்கப்பட உள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளை மின்வலு எரிசக்தி அமைச்சு வன்மையாக நிராகரித்துள்ளது.

அரசாங்கம் வேண்டுமென்றே மின்வெட்டை அமுலாக்குவதாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்ததாகவும் குறித்த செய்தி போலியானது எனவும் என அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்த்தன கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

சமகாலத்தில் நிலவும் உஷ்ணமான காலநிலைக்கு மத்தியில் மின்வலுத் தேவைகள் அதிகரித்துள்ளன. ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதியில் கூடுதலாக மின்சாரம் பயன்படுத்தப்படுவது வழமையான போக்காகும். நுரைச்சோலை லக்விஜய அனல் மின் நிலையத்தின் இரண்டாவது மின்பிறப்பாக்கி பழுதடைந்ததால் கடந்த இரண்டு நாட்கள் சில இடங்களில் மின்விநியோகம் தடைப்பட்டது. எனினும் நிலைமை முற்று முழுதாக சீரடைந்துள்ளது என மின்வலு எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments